கொரோனா வைரஸ் பரவல் ஆபத்தினை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவிட்டால் ஐந்தாவது
அலைஉருவாவதை தடுக்க முடியாமல் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
தெரிவித்துள்ளது.
நிலைமை மோசமடைந்தால் நாட்டை காலவரையறையின்றி முடக்கிவைத்திருப்பதை தவிர
அரசாங்கத்திற்கு வேறு வழியில்லாமல் போய்விடும் என அரசமருத்துவ அதிகாரிகள்
சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறான சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பை
எதிர்கொள்ளும்,இதிலிருந்து மீள்வதற்கு பல வருடங்கள் எடுக்கும் என
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் புதிய பிறழ்வுகள் தோன்றுவதற்கான வாய்ப்பு சர்வதேச
அளவிலும் உள்நாட்டிலும் எப்போதும் உள்ளது என தெரிவித்துள்ள அரச மருத்துவ
அதிகாரிகள் சங்கம் நாடு இந்த நிலையை எதிர்கொள்ள தயாராகவிட்டால்
மக்களிற்கு பெரும் ஆபத்து ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளது.
Discussion about this post