சட்ட அமைப்பு, கட்டிடக்கலை, உணவு, கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும்
இலங்கையின் சமூக அரசியல் அமைப்பின் பல்வேறு அம்சங்களில் இலங்கை மற்றும்
நெதர்லாந்துக்கு இடையேயான நீண்ட மற்றும் பயனுள்ள உறவு தாக்கம்
செலுத்தியுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
தெரிவிவித்துள்ளார்.
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் தஞ்சா கோங்க்ரிஜ்ப் மற்றும்
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள
வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் இதனைத்
தெரிவித்துள்ளார்.
Discussion about this post