தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக 2021 வாக்காளர் பட்டியலுக்கான
படிவங்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படாது என தேசிய தேர்தல் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.
2020 வாக்காளர் பட்டியலில் ஒருவர் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்கள்
புதிய படிவங்களை நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்றும் 2021ஆம் ஆண்டுக்கான
அதே முகவரியின் கீழ் பதிவு செய்யப்படுவர் என்றும் தேர்தல் ஆணைக்குழு
வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் அனைத்து கிராம சேவகர்
அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட இருந்தது. எனினும் தனிமைப்படுத்தல்
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால் வாக்காளர் பதிவேடுகளின் காட்சி
காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
2021க்கான பதிவுகளை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத் தளம் மூலம் முடிக்க
முடியும் எனவும் பெயர் பரிந்துரைக்கப்படாத ஒரு நபர் உடனடியாக
சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக சேவகருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்
தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Discussion about this post