கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள்
அதிகரித்துவரும் நிலையில் கொரனாவினால் உயிரிழப்பும் அதிகரித்து
வருகின்றமை கணக்குடித்தாகவுள்ளது அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்தில்
இதுவரைக்கும் கொரோனாவால் 3506 பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 இறப்புகள்
சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 8824 பேர் தடுப்பூசி
பெற்றுக் கொள்ளவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன்
தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கான நடமாடும் தடுப்பூசி செலுத்தும்
வேலைத்திட்டம் ஆரம்பித்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் நடமாடும் தடுப்பூசி செலுத்தும்
திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 18818 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கின்றனர்.
அவர்களில் ஏறத்தால 9994 பேர் மாத்திரமே தடுப்பூசி பெற்றுள்ளனர்.
மிகுதியான 8824 பேர்வரை தடுப்பூசி போடாமல் இருக்கின்றார்கள்.
தடுப்பூசி திட்டம் ஒரு மாத காலம் நீடித்தும் அவர்கள் தடுப்பூசியை
பெற்றுக்கொள்ளவில்லை.
அவர்களிற்கு வேறு வேறு காரணங்கள் இருக்கலாம்.
இந்த நிலையில் இன்றிலிருந்து ஒரு வார காலத்துக்கு அவர்களின் வீடுகளிற்கு
சென்று இராணுவத்தினரின் உதவியுடன் தடுப்பூசிகளை செலுத்தவுள்ளோம்.
கிளிநொச்சி மாவட்டத்தில் விடுபட்டுள்ள 8824 பேருக்கும் தடுப்பூசியை
செலுத்தும் வரை இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Discussion about this post