மெரிக்காவில் இருந்து இலங்கையில் மேற்கொள்ளப்படும் தனியார் துறை
முதலீடுகளை வரவேற்கிறோம். மேலும் அமெரிக்க – இலங்கை கூட்டாண்மைப்
பேச்சுவார்த்தை, வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பின் கூட்டு
ஆணைக்குழு மற்றும் அமெரிக்க – இலங்கை துறைசார் உரையாடல்கள் உள்ளிட்ட ஏனைய
இருதரப்பு விடயங்கள் குறித்து அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும்
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோருக்கு இடையில்
இடம்பெற்ற கலந்துரையாடலின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுதல், எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள்
கப்பல் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூகப்
பொருளாதாரத் தாக்கத்தைத் தணித்தல் மற்றும் ஒத்துழைப்பை எதிர்பார்த்தல்
ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட ஆதரவுகளுக்காக இதன் போது நன்றி தெரிவித்தார்.
Discussion about this post