தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாத 60 வயதைக் கடந்தவர்களுக்காக, அடுத்த
வாரத்தை நாளை (23) முதல் “தடுப்பூசி வாரம்“ என அரசாங்கம் அறிவித்துள்ளதாக
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
60 வயதைக் கடந்த 27 இலட்சத்து 50 ஆயிரம் பேர் ஒரு டோஸைக்கூட இதுவரையில்
செலுத்திக்கொள்ளவில்லை. தவறானக் கருத்துக்களாலும், தனிப்பட்டக்
காரணங்களாலும் சிலர் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவில்லை. இதுவே கொரோனா
வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணம் எனவும்
தெரிவித்தார்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா? இல்லையா?
என்பதை மக்களின் நடத்தையே தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post