ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில்
கைதானோரில், 62 பேருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி
ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொரோனா பெரும்பரவல் காரணமாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தாக்குதல் சம்பவத்துடன்
கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட அனைவரும், வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம்
செய்யப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் இன்று விசாரணைக்காக
முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
மேலும் பொலிஸாரின் ஆட்சேபனையுடன் அனைத்து சந்தேகநபர்களதும், விளக்கமறியல்
மீண்டும் நீடிக்கப்பட்டு, இவ்வழக்கு விசாரணை அடுத்த வழக்கு தவணையை
செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Discussion about this post