தலிபான் ஒரு சுதந்திரமான விடுதலைப் படையாகும். தமிழீழ விடுதலைப்
புலிகளுடன் (எல்.ரி.ரி.ஈ) எமக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்த
தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேச பேச்சாளருமான சுஹெய்ல் சஹாப்தீன்,
நாட்டின் சுதந்திரத்திற்காகவும் வெளிநாட்டு படைகளை எதிர்த்தும் கடந்த 20
வருட காலமாக போராடி வருகிறோம் என்று கூறினார்
இலங்கையின் டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய நேரக்காணலின் போதே அவர்
இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்
தலிபான்களை ஸ்ரீலங்கா பயங்கரவாதிகளாகக் கருதக்கூடாது என்றும் அவர்
சொன்னார். நாங்கள் விடுதலைப் போராளிகள். உங்களுடைய முன்னோர்கள் உங்கள்
நாட்டின் விடுதலைக்காக எப்படி போராடினார்களோ அப்படி போராடுபவர்கள்.
ஆனால் நாங்கள் விஷம பிரசாரம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்
கூறினார்.
Discussion about this post