கொரோனா மூன்றாவது அலையில் 19 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாக
சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
உயிரிழந்த அனைவரும் எவ்விதமான தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டிருக்கவில்லை
என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித்
பட்டுவன்துடாவ தெரிவித்தார்.
இதனால், நாட்டிலுள்ள அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் கொரோனா
தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகளை பிராந்திய சுகாதார
வைத்திய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதாகவும் டொக்டர் ரஞ்சித்
பட்டுவன்துடாவ குறிப்பிட்டார்.
ஆகவே, அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் தங்களுக்கான தடுப்பூசிகளை
ஏற்றிக்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான திகதியை அந்தந்த பகுதிக்கு
பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரிகளூடாக அறிந்துகொள்ளுமாறும் ரஞ்சித்
பட்டுவன்துடாவ மேலும் தெரிவித்தார்.
தற்போது பரவும் டெல்டா வைரஸ் பிறழ்வானது, மனித உடலில் விரைவாக
உட்புகக்கூடியது எனவும்
டெல்டா கொரோனா பிறழ்வு தொற்றிய ஒருவரின் உடலில் மிக விரைவாக வைரஸ்
அதிகளவில் உற்பதியாவதுடன், ஓரிரு நாட்களில் அதற்கான அறிகுறிகள் தென்படும்
எனவும் அவர் குறிப்பிட்டார்
Discussion about this post