இலங்கையில் கொவிட் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு
சக்தி தொடர்பில் ஆய்வு செய்யப்படவுள்ளது .
நோய் எதிர்ப்பு சக்தியின் கால எல்லை, அதன் தன்மை உள்ளிட்ட விடயங்கள்
ஆய்வு செய்யப்படவுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை,
நிர்ப்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சந்திம
ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அஸ்ட்ரா செனெக்கா மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகளை முழுமையாக
பெற்றுக்கொண்டவர்களிடமே மேற்படி ஆய்வானது மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த ஆய்வு எதிர்காலத்தில் பெரும் பயன் தரும் விடயமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது .
Discussion about this post