உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு
இடையேயான பங்குடைமை மூலம் நாடு முழுவதும் உள்ள 78 வைத்தியசாலைகளுக்கு
முக்கியமான அவசர மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ் உபகரண தொகுதியானது கொவிட் -19 தொற்றுப் பரவலுக்கு பங்களிப்புச்
செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
இதில் அதிக சார்பு அலகு (HDU) படுக்கைகள், விரல் துடிப்பு
ஆக்சிமீட்டர்கள், ஒட்சிசன் செறிவூட்டிகள், ஜம்போ ஒட்சிசன் சிலிண்டர்கள்
மற்றும் பிற அவசர உபகரணங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Discussion about this post