நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைக்
கருத்திற்கொண்டு செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை நாடளாவிய பொது முடக்கத்தை
அமுல்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்
எஸ்.எம்.மரிக்கார், நாட்டிலுள்ள அபாயகரமான சூழ்நிலை தொடர்பில் மருத்துவ
நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கின்ற போதிலும் ஏன் இந்த முடிவை எட்டவில்லை
எனக் கேள்வி எழுப்பினார்.
அரசாங்கம் இன்னும் ஒரு முடிவை எட்டவில்லை என்றாலும், 5,400 பேர்
கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
சமூகம் அச்சத்தில் வாழ்கிறது, மேலும் பொதுமக்கள் அச்சத்தில் வீட்டுக்குள்
வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நாட்டை முழுவதுமாகத் திறக்க ஒரே வழி முழுமையான தடுப்பூசி மற்றும் நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே என அவர் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post