டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும் என
வைத்தியர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
தெரண அளுத் பார்ளிமேன்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து
தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பில்
தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அடுத்த இரண்டு மூன்று வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை என அவர்
தெரிவித்துள்ளார்.
5 வினாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட நமக்கு தொற்று ஏற்பட
வாய்ப்பு இருப்பதாகவும் இது பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க
வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post