நாட்டில் கொரோனா தொற்று நிலைமை மோசமடைந்துவரும் நிலையில் மக்கள்
நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தே சிறந்த வழி என
விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு நிலையங்களிலும் அதன்
அதிகபட்ச திறனை அடைந்துள்ளது என்றும் விசேட வைத்திய நிபுணர்கள்
சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை கவலைக்கிடமாக உள்ளதுடன் ஒட்சிசன்
உதவியுடன் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிவேகமாக
அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை படுக்கைகள் நிரம்பியுள்ளதுடன் ஒட்சிசன் தேவையும் அதிகரித்துவரும்
நிலையில், இன்னும் சில நாட்களில் கொரோனாவின் பேரழிவை நோக்கி
சென்றுவிடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேரழிவில் இருந்து மீள, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த விரைவில்
மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என லக்குமார்
பெர்னாண்டோ அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post