கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் கிராமத்தில் தொடர்ச்சியாக இரவு
நேரங்களில் வயல் நிலங்கள் மற்றும் பொது மக்களின் காணிகளில் உள்ள பனை
மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுகின்றன என கிராமத்தின் பொது அமைப்புக்கள்
குற்றம் சாட்டியுள்ளன.
நீவில் பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வினை தொடர்ந்து தற்போது
சட்டவிரோதமாக பெறுமதிக்க பனை மரங்கள் இரவு நேங்களில் இயந்திரங்கள்
மூலம் வெட்டப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டுச் செல்லப்படுவதாக
தெரிவித்துள்ள பொது மக்கள் இது தொடர்பில் பல தடவைகள் பலரின் கவனத்திற்கு
கொண்டு சென்ற போதும் எவரும் ஆக்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை
என்றும் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு நேற்று முன்தினம் வெட்டப்பட்ட பனைமரங்கள் தொடர்பில் பொலீஸாருக்கு
அறிவித்த போதும் அவர்கள் பனைமரங்கள் வெட்டப்படுவது தொடர்பில் பொலீஸ்
நிலையம் வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறு தெரிவித்துள்ளனர். சட்டவிரோத
பனை மரங்கள் வெட்டப்படுவது தொடர்பில் யார் மீது முறைப்பாடு செய்வது
என்பது தெரியாத நிலையிலும் அதனை கட்டுப்படுத்த முடியாத நிலையிலும் கிராம
மக்கள் காணப்படுவதாக கிராமத்தின் பொது அமைப்புக்கள் கவலை
தெரிவித்துள்ளனர்.
Discussion about this post