பிரான்ஸ் (France) பெண் ஒருவரை தவறான முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி சுற்றுலா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சம்பவமானது, கண்டியில் (Kandy) குறித்த பிரான்ஸ் பெண் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.அதன் போது, கண்டி – குண்டசாலை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கண்டி சுற்றுலா காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post