நாட்டில் உள்ள பல பகுதிகளில் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்றையதினம் (02-10-2024) பிற்பகல் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (03-10-2024) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post