அண்மையில் கிளிநொச்சி மதுபான சாலை விவகாரம் தமிழ் அரசியல் மாபியாக்களின் முகத்திரைகளை கிழித்து காட்டியிருந்தது.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழ்த் தேசியம் சாராய கடைகளில் நிற்பது தொடர்பில் சமூக வலைத்தள வாசி ஒருவரது பதிவில்,
என்ன மந்திரமோ? என்ன சூனியமோ? ட்ரயல் அற் பாரில் நீதிமான்களின் ஒற்றுமையில் ஒன்றாகித் தொடங்கிய தமிழ்த் தேசியம் இன்று சாராய பாரில் வந்து பலப்பலவாய் பிரிந்து நிற்கிறது. ஜீ ஜீ, செல்வா, திருச்செல்வம், ட்ரயல் அற் பார் வழக்கில் வெற்றி வாகைசூடியது மட்டுமன்றி சிறீமாவோ- அவர் மாமன் பீலிக்ஸ் அரசை ஆட்டம் காணவும் வைத்த சில நாள்களில் ஒவ்வொருவரும் அதிசயமாய் மறைந்தனர்.
இம்மூவரும் 77 தேர்தலுக்கு முன்னரே மூவரும் அமரரானார்கள் ட்ரயல் அற் பாரின் வெற்றிக் களிப்பைத் தமிழினம் மறக்க முன்னே அடுத்தடுத்து மறைந்தனர் என்ன மந்திரமோ? என்ன சூனியமோ? என்று தமிழினம் ஏங்கிய நாள்கள் அவை.அப்படிக் கட்டுரைகளும் எழுதியவர் உண்டு. 77 மேடையில் வண்ணையும் காசியும் கூடப் பேசினர் இந்த மூவரின் இந்த நீதிமன்றப் படமும் அன்றைய தமிழீழத்துக்கான ஆணை கேட்ட பொதுசன வாக்கெடுப்பிற்குப் பெரும் வாக்குச் சேர்வதற்குக் காரணமான போஸ்டர்களில் இருந்த ஒன்று.
தமிழர் தலைவர்களின் கனவை நனவாக்க எமது X உதயசூரியனுக்கே எனப் படத்தின் கீழ் வாசகம். தமக்குப் பின்னர் நீதித்துறையில் எவர் வந்தாலும் சட்டத்தில் எத்தனை “ட்ரயல் அற் பார்கள்’ நடத்தப்பட்டாலும் அவையெல்லாவற்றையும் வென்றெம் மக்களை அவர் காப்பார் என்றே இம்மூவரும் வானத்தில் நினைத்திருப்பர்.அப்படி வரும் ஒருவர் சாராய பாருக்குப்- பெமிற் எடுத்துக் கொடுப்பார் என்று நினைத்திருப்பார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Discussion about this post