கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் மிஸிஸாகா பகுதியில் உணவு பாதுகாப்பின்மை அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.மிஸிஸாகாவில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உணவு வங்கியை பயன்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் மிக அதிக வேகமாக உணவு வங்கியை பயன்பாடு இடம்பெறும் பகுதியாக மிஸிஸாகா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 13 பேரில் ஒருவர் அல்லது எட்டு வீதமான மக்கள் உணவு வங்கியை பயன்படுத்தி உள்ளனர்.கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் இந்த ஆண்டு மே மாதம் வரையில் இந்த புள்ளி விபர தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.உணவு வங்கியின் உதவியை பெற்றுக் கொண்டவர்களில் 30 வீதமானவர்கள் சிறுவர்கள் எனவும் இது கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 42 வீத அதிகரிப்பு எனவும் தெரிவிக்கப்படுகிறது
Discussion about this post