இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தனது வான்வழித் தடத்தைத் தற்காலிகமாக மூடியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை காலை வரை ஈரானில் அனைத்து விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை,ஈரானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை கருத்தில் கொண்டு இந்திய மக்கள் அங்கு செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Discussion about this post