மத்திய வங்கி நிதி மோசடி வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் என அநுர அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய ஜனாதிபதி என்ற சிறப்புரிமையின் தப்பிய ரணில் விக்ரமசிங்கவை, தற்போது பதவி இழந்துள்ள நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்
வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை விரைவில் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Discussion about this post