லெபனானில் வெடித்துசிதறிய பேஜர்களை இஸ்ரேலிய உளவுநிறுவனமான மொசாட் எப்படி ஹிஸ்புல்லாக்களின் கைகளுக்கு கொண்டுவந்துசேர்த்தார்கள் என்கின்ற விடயம் தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகின்றது.
அதிலும் உலங்குவானூர்தியில் பறந்துகொண்டிருந்த ஈரான் ஜனாதிபதி கூட பேஜர் வெடிப்பின் மூலமே கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற நிலையில், ஈரான் போன்ற ஒரு நாட்டுக்கான வழங்கல்களில் எப்படி கைவைத்தது இஸ்ரேலிய உளவு அமைப்பு என்கின்ற கேள்வி உலகம் முழுவதும் பரவலாக எழுப்பப்ட்டு வருகின்றது.
கிட்டத்தட்ட இதேபோன்று நடைபெற்ற மற்றொரு அதிரடிச் சம்பவத்தைத்தான் இன்றைய நிகழ்ச்சியில் நாம் மீட்டுப் பார்க்க இருக்கின்றோம்.
ஒரு தரப்புக்கு என்று வியோகிக்கப்பட்ட இராணுவ உபரகரணங்ளுக்குள் மற்றொரு தரப்பு புகுந்து விளையாடிய சம்பவம்.
இராணுவ சப்ளைச் செயினுக்குள் இரகசியமாக உள்நுழைந்து, ஒரு தரப்புக்கு என்று வினியோகிக்கப்பட்ட இராணுவப் பொதியை கையகப்படுத்திய ஒரு வித்தியாசமான உளவுச் சாதனை.
- அந்தச் சம்பதை மேற்கொண்டது தமிழீழ விடுதலைப் புலிகள்.
- அந்தச் சம்பவத்திலும் இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றும் சம்பந்தப்பட்டிருந்தது.
Discussion about this post