தமிழரசுக் கட்சியின் குழப்பவாதி சட்டத்தரணி இன்றையதினம் வழங்கிய செவ்வியில் தனது முடிவை சுசகமாக சொல்லி விட்டார்.ஜனாதிபதி தேர்தலின் போது குறித்த குழப்பவாதி சட்டத்தரணியின் முடிவான சஜித்தை ஆதரிப்பது என்பது தனிநபர் முடிவை கட்சியின் முடிவாக மாற்றி அனைத்தையும் செய்தார்.
அதில் ஒரு சாரார் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்தானர், ஆதரித்தவர்கள் தொடர்பில் தேர்தல் முடிந்த பின் விளக்கம் கோருவது என்பது 28.09.2024இன் கூட்ட தீர்மானம்.
ஆனால் குழப்பவாதி சட்டத்தரணி 2015இல் மைத்திரிபாலவை ஆதரிக்காமல் எதிர்த்த திருமதி.அனந்தி மற்றும் சிவகரனை கட்சியில் இருந்து நீக்கிய நினைவு படுத்தியதுவே பெரும் எச்சரிக்கை.
ஆகவே 2024 சஜித்தை ஆதரிக்காதவர்கள் மீது விளக்கம் கோரி கடிதம் எழுதுவது, அவ்வாறு எழுதினால் அவர்களை வேட்பாளர் பட்டியலில் இணைக்க முடியாது என சட்ட வியாக்கியானம் கொடுப்பதற்கு குறித்த குழப்பவாதி சட்டத்தரணி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
இப்போது செயலாளராக இருப்பவர் தலைமறைவாதற்கு ஏற்பாடுகள் நிறைவு பெற்றுள்ளன. எனவே தமிழரசுக்கட்சியில் பலரை நீக்கி குழப்பவாதி சட்டத்தரணி தனது ஆதரவாளர்களால் வேட்புமனு தயாரிக்க பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
வைத்தியர் வைத்தியசாலையில் தங்குவதற்கு தயாராவதாகவும், நல்ல வைத்தியசாலையை மட்டக்களப்பு மல்லி பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post