இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதி பதவில் இருந்து ஓய்வுபெறும் போது தனது வங்கிக் கணக்கில் பணம் எதுவும் இல்லை எனவும், தற்போது காணி விற்று வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
நாட்டின் புதிய ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்க தலையைிலான அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளை நிறுத்தவுள்ளதாக தெரிவித்த நிலையில் சந்திரிக்கா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய அவர்,
தாம் அரசாங்கத்திடமிருந்து எதனையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் யாரிடமிருந்தும் எதையும் வாங்கி சாப்பிடவில்லை. எங்களிடம் இருப்பதை மட்டுமே மற்றவர்களுக்குக் கொடுத்தோம்.
நான் ஜனாதிபதியாக இருந்து வீட்டிற்குச் சென்றபோது, என் வங்கிக் கணக்கு உண்மையில் ஓவர் டிராஃப்ட் ஆனது, பின்னர், நான் நிலத்தை விற்று வாழ்கிறேன்.
மேலும், நான் மின்சார கட்டணத்தை செலுத்துகிறேன். என்னிடம் நான்கு வாகனங்கள் உள்ளன, மேலும் 4 கார்கள் உள்ளன என மேலும் தெரிவித்தார்.
Discussion about this post