அல்லு அர்ஜுன்
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா. சுகுமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.
அதை தொடர்ந்து, இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் மாதம் வெளிவர உள்ளது. இப்படத்தின் டீஸர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அல்லு அர்ஜுன் சினேகா ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு அயான் என்ற மகனும், அர்ஹா என்ற மகளும் உள்ளனர்
ஆர்த்தி போல் சினேகா ரெட்டி
நேற்று, சினேகா ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு பல ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அதில், குறிப்பாக அல்லு அர்ஜுன் அவர் காதல் மனைவி பிறந்தநாள் என்பதால் மிகவும் அழகான ஒரு பதிவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
அந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதாவது அல்லு அர்ஜுன் மனைவி சினேகா இரண்டு குழந்தைகளுக்கு தாய் போன்று தெரியவில்லை என்றும், பார்ப்பதற்கு நடிகை போன்று இருக்கிறார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதுபோன்று தான் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியையும் ரசிகர்கள் கூறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post