முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது, நாடாளுமன்ற சேவைகள் பிரவினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதங்களை உரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற சேவைகள் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொடுப்பனவுகள் ரத்து
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து வசதிகளும் இரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு, ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், எரிபொருள் வசதிகள் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் என்பனவும் ரத்த செய்யப்படும்.
பொதுத்தேர்தல்
ஆனால், மதிவேல கவுன்சிலர் குடியிருப்பு வளாகத்தில் வழங்கப்பட்டிருந்த குடியிருப்புகளை மட்டுமே பொதுத் தேர்தல் நடைபெறும் நாள் வரை பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், பொதுத்தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாத அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் முடிந்த மறுநாள் மீண்டும் தங்கள் அலுவலகங்களை ஒப்படைக்க வேண்டும்.
Discussion about this post