கடந்த ஜூன் 5ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்றனர்.
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வுகளை நிறைவு செய்துவிட்டு பூமி திரும்பும்போது ஸ்டார் லைனர் விண்கலம் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கில் ஏற்பட்டது.
இதன்படி, விண்வெளி வீரர்கள் இல்லாமல் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து கடந்த 6ம் திகதி மாலை 6 மணியளவில் ஸ்டார் லைனர் விண்கலம் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியது. சுமார் 6 மணி நேரம் பயணித்த விண்கலம் மறுநாள் 12.10 மணியளவில் பூமியை வந்தடைந்தது.
இதனையடுத்து இன்றையதினம் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்க டிராகன் விண்கலம் புறப்பட்டு சென்றுள்ளது.
குறித்த விண்கலம் பூமிக்கு திரும்பும் திகதி தொடர்பான விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
Discussion about this post