யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஆண் காவல்துறை உத்தியோகஸ்தரை தவறான முறைக்குட்படுத்த முயன்ற காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி குற்றம் சுமத்தியுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரி, அந்த காவல்நிலையத்தில் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தர்கள் சிலருடன் மாதகல் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார்.அங்கு, பொறுப்பதிகாரிக்கு தெரிந்த வெளிநபர்கள் சிலரும் வந்திருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து மது அருந்திய பின்னர் கடலில் குளித்த போது, பொறுப்பதிகாரி, தன்னுடன் அழைத்து சென்ற காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவருடன் தவறான சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
காவல்துறை விசாரணை
அதனை அவர் தடுத்து எச்சரித்த நிலையில் அங்கிருந்து புறப்பட்டு, காவல்நிலையம் வரும் வழியில், விடுதி ஒன்றுக்கு காவல்துறை உத்தியோகஸ்தரை அழைத்து சென்று, அங்குள்ள அறை ஒன்றிற்குள் பூட்டி தவறான முறைக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.
இது தொடர்பில் காவல்நிலையத்தில் உள்ள பதிவேட்டு புத்தகத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையாக எழுதியுள்ளார்.
தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தின் பின்னர் பொறுப்பதிகாரி தன்னை பழிவாங்கும் வகையில் தொடர்ந்து செயற்படுவதனால் மனவுளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதால், காவல்துறை சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post