தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பலமானதொரு தரப்பாகப் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கிடையில் நேற்றுமுன்தினம்(24) செவ்வாய்க்கிழமை கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதன் பெறுபேறுகள் குறித்தும், எதிர்வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக கூறப்பட்டது
ஒன்றிணைவு
இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem), அடுத்த தேர்தலில் அரசொன்றை அமைப்பதற்காக மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளத் தயாராகி வருகின்றோம்.
இம்முறை தேசிய மக்கள் சக்தியே ஐக்கிய மக்கள் கூட்டணிக்கான முக்கிய சவாலாகக் காணப்படுகின்றது.ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அப்பால் இருக்கும் ஏனைய கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றோம்.” என்றார்.எனினும், இந்த சந்திப்பு பற்றி சுமந்திரனிடம் (MA sumanthiran) வினவியபோது, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் குறித்தே தாம் கலந்துரையாடியதாகவும், பொதுத் தேர்தல் தொடர்பில் எதுவும் பேசவில்லை என்றே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post