சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் திட்டம் தொடரும் என்றும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான சலுகைகள் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நேற்று (25) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியினை பெறுவதற்கான திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு உத்தேசித்துள்ளோம்.
கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல கடன் வழங்குநர்களுடன் கலந்துரையாடி, கடன் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான விடயங்களை விரைவில் நிறைவு செய்யவுள்ளோம்
எங்கள் வேலைத்திட்டங்களில் திருப்தியடையாதவர்கள் கூட, எமது வெற்றியால் மகிழ்ச்சியடைவார்களாயின் மாத்திரமே, எமது வெற்றி முழுமை பெறும்.
அதேநேரம், அனைத்து துறைகளுக்குமான வியூகங்களை மாற்றுவதற்கு முன்னர், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரநிலையில் தக்கவைப்பது முக்கியமானது.
இதேவேளை அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் செய்யப்படுவதற்கு முன்னர் பொருளாதாரம் நிலையான நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்
Discussion about this post