வடக்கு மார்க்கத்தில் தொடருந்துகளை இயக்குவது தொடர்பாக தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railways) புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.அதன்படி, வடக்கிற்கான தொடருந்து சேவைகளை ஆரம்பிக்க 4 மாதங்களுக்கும் மேலாகும் என தொடருந்து திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை அமைச்சர் மற்றும் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது
ஜனாதிபதி தேர்தல்மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான தொடருந்து மார்க்க பகுதி நவீனமயமாக்கல் காரணமாக மூடப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் ஜனாதிபதி தேர்தல் காரணமாக தேர்தல் கடமைகளுக்காக வரும் உத்தியோகத்தர்களுக்கும் கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அந்த மார்க்கம் மீண்டும் திறக்கப்பட்டது.அதன்படி கடந்த 19, 20, 21, 22 ஆகிய தினங்களில் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை பல விசேட தொடருந்து சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Discussion about this post