நாட்டின் 25 நிருவாக மாவட்டங்களுள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பேர் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த 250 பேரும்…..!
கட்டுப்பாட்டு விலையை கடந்து பொருட்களை விற்கும் கடைக்காரர்கள்.
அரசபேருந்தில் பயணச்சீட்டு வழங்காமல் காசை வேண்டும் நடத்துநர்கள்
போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காமல் கண்மூடித்தனமாக வாகனமோட்டும் சாரதிகள்
அரச அலுவலகங்களில் கடமையை செய்யாமல் மக்களை அலைக்கழிக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் அரச அதிகாரிகள்
சட்டத்திற்கும் சிஸ்டத்திற்கும் புறம்பாக அடிமட்ட உத்தியோகத்தர்களை பழிவாங்கும் மேலதிகாரிகள்
அரச அலுவலகங்களில் கூடிய 30 நிமிடத்திற்கு மேலாக சேவையை வழங்காமல் தேவையற்ற இழுத்தடிப்பு செய்யும் அரச சேவையாளர்கள்
அலுவலகமொன்றிலிருந்து அல்லது பொதுமகனிடமிருந்து கிடைக்கப்பெறும் கடிதங்களுக்கு கூடிய 14 நாட்களுக்குள் பதிலளிக்காத உத்தியோகத்தர்கள்
சேவை பெறுநர்களை ஒருமையில் மரியாதைக்குறைவாக நடத்தும் அதிகாரிகள் நோயாளிகளை கடிந்து பேசும் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள்
கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் பிழைப்பு நடத்தும் வைத்தியர்கள் பாடசாலை நேரத்தில் தனியார் நிறுவனங்களில் வகுப்பெடுக்கும் பாடசாலை ஆசிரியர்கள்
வெற்றிலை பாக்கு தரித்து அரச பேருந்தில் பயணிப்போர் மற்றும் பொது இடத்தில் வெற்றிலையை உமிழ்வோர்
மதுபோதையில் பொது இடத்தில் நின்று குழப்பம் விளைவிப்போர் மற்றும் தூஷண வார்த்தைகள் கொட்டுவோர்
போக்குவரத்து விதிமீறலுக்காக இலஞ்சம் வாங்கும் பொலிசார் போக்குவரத்து விதியை மீறும் பொலிசார் என 100 ஏற்பாடுகள் என இத்தகையோரை தகுந்த ஆதாரங்களுடன் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தெரியப்படுத்தி 48 மணிநேரத்தில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவர். இதற்காக வேலையிழப்பு, நஷ்ட ஈடு, சிறைத்தண்டனை போன்றவற்றை அனுபவிக்க நேரிடும்.
இந்த 250 பேரும் யாரென்று அவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவர்களுக்குள்கூட ஒருவரை ஒருவர் தெரியாது. இவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவே மாட்டார்கள். என முகநூலில் ஒருவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
Discussion about this post