பு்திய அரசாங்கத்தில் பிரதமராக திருமதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்து கொள்வதாகவும், அமைச்சர்களாக விஜித ஹேரத் மற்றும் லக்ஸ்மன் நிபுன ஆராச்சி ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர குமாரதிஸாநாயக்க நேற்றையதினம் பதவியேற்றுள்ள நிலையில், புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணம் இன்று(24) இடம்பெறலாம் என கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, நாட்டின் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணரச்சியின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி மூலம் அறிவித்தது.
அதன்படி அவர் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளலாம் எனவும் கூறப்படுகின்றது.அதாவது,நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்யாமலேயே அமைச்சராக பணியாற்றும் தகுதி அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்வாறானதொரு பின்னணியில் இன்று (24) பிற்பகல் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி அநுர குமாரதிஸாநாயக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி 15 அமைச்சுக்களின் பொறுப்புகள் ஜனாதிபதி உட்பட நான்கு பேருக்கும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
உரிய நியமனங்களை மேற்கொண்டு இன்று (24) இரவு பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை அறிவிக்கும் வர்த்தமானியில் பொதுத் தேர்தல் வேட்புமனு தாக்கல் காலம் மற்றும் வாக்குப்பதிவு திகதி என்பன குறிப்பிடப்படும்.
அதேவேளை, பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நாளிலிருந்து 52 முதல் 66 நாட்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post