மொனராகலையில் உள்ள பகுதியொன்றில் வெளிநாட்டுப் பிரஜைகள் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம், வெல்லவாய – கொஸ்லந்த பிரதான வீதியில் தியலும நீர்வீழ்ச்சிக்கு அருகில் நேற்று (22-09-2024) காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, முச்சக்கரவண்டியில் பயணித்த 3 வெளிநாட்டுப் பெண்கள் காயமடைந்துள்ள நிலையில் கொஸ்லந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post