இலங்கையின் 9 அவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (23-09-2024) காலை தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பதவியேற்கவுள்ளார்.
இதன்படி, கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் அவரது பதவியேற்பு வைபவம் மிக எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.இதேவேளை, நிதியமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நியமிக்கப்படவுள்ளார்.
அதற்கு மேலதிகமாக புதிய ஜனாதிபதியின் கீழ் 15 அமைச்சுப் பொறுப்புகளும் கொண்டுவரப்படவுள்ளன.
சில அமைச்சுகளின் பொறுப்புகள் ஹரிணி மற்றும் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
மேலும் கூடிய விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அமைச்சுகளின் நிர்வாகம் அமைச்சு செயலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post