இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் நிராரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.இம்முறை தேர்தலில் வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் போட்டியிட்டதன் காரணமாக எந்தவொரு வேட்பாளரும் 50 வீதம் வாக்குகளைப் பெற முடியாது என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.
விருப்பு வாக்குகள்
அதன் காரணமாக இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
எனினும் அவ்வாறு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகளை அளிப்பதற்கான சரியான முறை குறித்த தெளிவு உரிய முறையில் வழங்கப்படாத காரணத்தினால் அவ்வாறு இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு நிராகரிக்கப்பட்ட வாக்குகள் சுமார் ஒன்றரை லட்சம் அளவில் இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
Discussion about this post