யாழ் வல்லிபுரக் கோவில் கடற்தீர்த்த உற்சவத்தின் போது கடலில் மூழ்கிக் காணாமல் போன வேம்படி மகளீர் கல்லுாரி ஆசிரியரின் சடலம் கையொதுங்கியுள்ளது.
ஆசிரியரின் சடலம் இந்தியக் கடல் எல்லையில் வடமராட்சி கற்கோவள மீனவர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
கடந்தவாரம் இடம்பெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்த உற்சவத்தில் குறித்த ஆசிரியர் கடலில் நீராடியபோது காணாமல்போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post