கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தி முடிக்க மேலும்
15 ஆயிரம் ஊசிகள் தேவை – மாவட்ட அரச அதிபர்
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி
செலுத்தி முடிப்பதற்கு இன்னும் 15 ஆயிரம் கொவிட் 19 தடுப்பூசிகள் தேவை
என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன்
தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களின்
இன்று (04.08.2021) இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
அவ்ர மேலும் கருத்து தெரிவிக்கையில்
30 வயதுக்கு மேட்பட்டோர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசி 50 000 பெறப்பட்ட
போதிலும் இதுவரையில் 43196 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது
இன்றும் நாளையும் ஏனைய தடுப்பூசிகள் முற்று முழுதாக வழங்கப்படும் என
நம்புவதாக தெரிவித்த அவர் மேலும் 15000 தடுப்பூசிகள் மேலதிகமாக
தேவைப்படுகிறது எனவும் தெரிவித்திருந்தார்.
அத்தோடு நேற்றைய தினம் (03) கிளிநொச்சி மாவட்டத்தில் 68 தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளனர்.அதே வேளை 2809 தனிமைபடுத்தப்பட்ட குடும்பங்களுக்கா
நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
Discussion about this post