அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.குறித்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர்.
கடந்த 10-ம் திகதி இரண்டு வேட்பாளர்களும் தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேரடி விவாதம் மற்றும் அதற்கு முன்பு நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக நேரடி விவாதத்திற்கு பிறகு 11-ம் திகதி முதல் 19-ம் திகதி வரை ராய்ட்டர்ஸ்/இப்சோல் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக 47 சதவீத வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்
Discussion about this post