கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 20இலட்சம் பெறுமதியான
நோய் நிலை கண்காணிப்பு திரை, மற்றும் கிருமி நீக்கும்
இயந்திரங்கள்,மற்றும் ஒட்சிசன் செரிவூட்டிகள் (AJWS) அமெரிக்க யூத உலக
சேவை நிறுவனத்தின் நிதி அணுசரனையில் மன்னார் மாவட்ட சமூக பொருளாதார
மேம்பாட்டிற்கான நிறுவனத்தினால்( MSEDO) வைபவ ரீதியாக கிளிநொச்சி மாவட்ட
பொது வைத்தியசாலை பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளை
நோய்த் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க
அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கோரிக்கைக்கு
அமைவாக 20 லட்சம் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் மற்றும்
கிருமி நீக்கும் இயந்திரங்கள் ஒட்சிசன் செரிவூட்டிகள் கிளிநொச்சி மாவட்ட
பொது வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் அரசாங்க அதிபரிடம் கிளிநொச்சி
மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து மன்னார் சமூக பொருளாதார
மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ கையளித்தார்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன்
மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும்
வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் பெண்கள் வாழ்வுரிமை கழக கிளிநொச்சி மாவட்ட
இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் மற்றும் மன்னார் சமூக பொருளாதார
மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Discussion about this post