ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகளையும் அதிகாரிகளையும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கை ஆரம்பமாக்கியுள்ளது.குறித்த நடவடிக்கை இன்று (20.9.2024) காலை முதல் இடம்பெறும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.நடைபெறவுள்ள தேர்தலில் ஒரு கோடியே 71 லட்சத்து 41,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்களிப்பு நிலையங்கள்அதற்காக நாடளாவிய ரீதியாக 13,421 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. வாக்கெண்ணும் பணிகளுக்காக 1,713 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission ) தெரிவித்துள்ளது
இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (20) கூடுதல் தொலைதூர சேவை பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.
Discussion about this post