இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு இருபது வருட தடை விதிக்க கிரிக்கெட் அவுஸ்திரேலியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய அவர் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நடத்தை விதிகளை மீறியதாக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதன்படி, கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின், மாநிலம் அல்லது பிற கிரிக்கெட் சங்கம் அல்லது பிக்பேஷ் அணிகளில் அவர் எந்த பதவியையும் வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
விக்டோரியா மாநில கிரிக்கெட் நிறுவனத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்த போது, ”தகாத நடத்தை” தொடர்பில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதன் பின்னர் துலிப் சமரவீர மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post