இரண்டு வாரங்களுக்குள் நாடு உத்தியோகபூர்வமாக வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்றையதினம் (18) இடம்பெற்ற “இயலும் சிறிலங்கா” பொது கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடந்தும் அவர் அங்கு தெரிவித்ததாவது, “ஐ.எம்.எஃப், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் நான் கலந்துரையாடினேன். எங்களைப் போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாட்டிற்கு ஏற்ற ஒரு ஒப்பந்தத்தை எட்டினோம்.
ஒப்பந்தம்
இப்போது வங்குரோத்து நிலையை அகற்ற மூன்றாவது குழுவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அந்த தனியார் பங்குகளும் நாளைக்குள் முடிவடையும்.
நான் இந்த நாட்டின் வங்குரோத்து நிலையை நீக்கும் அதிகாரபூர்வ நிலையை அடைந்துவிட்டேன்.
இந்த விடயங்களை மாற்ற மாட்டொம் என ஐ.எம்.எஃப் மேலாண்மை இயக்குனர் கூறினார், தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரத்தில் அவர்கள் இந்த வேலைத்திட்டங்களை நிறைவு செய்து விடுவார்கள்.” என்றார்.
Discussion about this post