உலகளவில் 27 நாடுகளில் எக்ஸ்.இ.சி (XEC) எனும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.ஜேர்மனியில் கடந்த ஜூன் மாதம் அடையாளம் காணப்பட்ட எக்ஸ்.இ.சி (XEC) எனும் குறித்த வைரஸ் இதுவரை பிரித்தானியா, அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குளிர் காலத்தில் வேகமாகப் பரவத் தக்க சில புதிய பிறழ்வுகளை இந்த புதிய வைரஸ் கொண்டிருப்பதாகவும் தடுப்பூசிகள் பயன்பாடு காரணமாக இந்தத் திரிபால் மனிதர்களுக்குத் தீவிரமான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் கால புதிய கொரோனா திரிபுகளுக்கு ஏற்பத் தடுப்பூசிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.எக்ஸ்.இ.சி XEC எனும் இந்தப் புதிய திரிபு, முந்தைய ஒமிக்ரோன் திரிபில் இருந்து உருவாகியுள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post