2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து அமைக்கப்படும் சஜித் பிரேமதாச(sajith premadasa) அரசாங்கத்தின் கீழ் தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை மீண்டும் ஒருமுறை நடத்தப்படும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(dayasiri jayasekara) தெரிவித்துள்ளார்.
தற்போது நடந்து முடிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் கசிந்துள்ளதாக சுட்டிக்காட்டிய எம்.பி., ஜயசேகர, தேர்தலின் பின்னர் மீண்டும் பரீட்சை நடத்துவது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்தார்.
எவ்வாறு நாட்டை ஆள முடியும்
ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) தலைமையிலான அரசாங்கத்தினால் இந்த சாதாரண பரீட்சையை கூட நடத்த முடியாவிட்டால் எவ்வாறு நாட்டை ஆள முடியும் என அண்மையில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜயசேகர கேள்வி எழுப்பினார்.
புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் பெறுபேறுகளை இடைநிறுத்துவது
ரணில் விக்ரமசிங்க தன்னால் எதுவும் செய்ய முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தேர்தல் முடிவடைந்தவுடன், தற்போது நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் பெறுபேறுகளை இடைநிறுத்துவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தலைமையில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அதனை மீள நடத்துவோம்.
புதிய அரசாங்கம் எமது தரம் 05 பாடசாலை மாணவர்களுக்கு நீதி வழங்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்
Discussion about this post