சர்ச்சைகளைத் தீர்க்க எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும், அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் பயப்படப் போவதில்லை எனவும் ஈரான் (Iran) வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராச்சி (Abbas Araqchi) தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை சர்வதேச செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா (United States) மற்றும் மூன்று ஐரோப்பிய நாடுகள் ஈரான் விமான சேவைக்கு தடை விதித்துள்ள நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் விமானப் போக்குவரத்து
உக்ரைனுக்கு (Ukraine) எதிரான போரில் ரஷ்யாவிற்கு (Russia) பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வழங்கியதாக வெளியான தகவலை அடுத்து, ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறையை இலக்காகக் கொண்டு புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க, ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஈரான் தனது சொந்த பாதையில் பலத்துடன் தொடர்கிறது என குறிப்பிட்டுள்ள அமைச்சர், நாங்கள் எப்போதும் சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிப்போம் என தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யாவுக்கு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வழங்கியதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, ஜேர்மனி (Germany), பிரித்தானியா (United Kingdom) மற்றும் பிரான்ஸ் (France) ஆகிய நாடுகள் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதில் ஈரான் விமான சேவை நிறுவனமும் உட்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post