சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இனவாத செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தலைமை வகித்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாவனல்லையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில், “சிறிலங்கா பொதுஜன பெரமுன எப்போதும் இனவாத அரசியலையே முன்னெடுக்கின்றது.2015ஆம் ஆண்டு ராஜபக்ஷக்கள் தோல்வியடைந்தனர்
சொத்து கொள்ளை
அவர்கள் பொது மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்களைக் கொள்ளையடித்திருந்தனர். மக்கள் அதற்கு எதிராக வாக்களித்ததை அடுத்து அவர்கள் தோல்வியைச் சந்தித்தனர்
2016ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரங்களையடுத்து, தோல்வியடைந்த மகிந்த குழுவினர் மீண்டும் தலை நிமிர்ந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அதனைத் தொடர்ந்து ஏப்ரல்-21 தாக்குதலின் பின்னர் மகிந்த தரப்பு முழுமையாகத் தலைநிமிர்ந்ததுடன், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
அதன் பின்னரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார்கள், இவ்வாறான சூழலிலேயே நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது.
அதன்பின்னர் வாக்களித்த மக்கள் அவர்களை விரட்டியடித்தார்கள் எனினும் அந்த குழுவினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தலைமை வகித்து வந்தார்” என்றார்.
Discussion about this post