சீனாவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றில் விற்பனை செய்யப்பட்ட ‘மூன் கேக்’ (mooncake) ஒன்றில் மனித பல் ஒன்று காணப்பட்டுள்ளமை வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குறித்த பல்பொருள் அங்காடியில் வாங்கிய மூன் கேக்கில் இருந்த பல் ஒன்றைக் காட்டும் காணொளியை வெளியிட்டுள்ளார்.
அந்த பல் தனது குடும்ப உறுப்பினர்களில் யாருடையதும் இல்லை என கூறியுள்ள அவர், அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு சீனாவின் சாங்க்ஸோவில் உள்ள சாம்ஸ் கிளப் பல்பொருள் அங்காடி சம்பவத்தை ஒப்புக் கொண்டுள்ளதுடன், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post