Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் – அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களின் விடுமுறை: வெளியான முக்கிய தகவல்

September 16, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஜனாதிபதித் தேர்தல் – அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களின் விடுமுறை: வெளியான முக்கிய தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக விடுமுறை வழங்குமாறு அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பெப்ரல் (Pafrel) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இந்த சட்டத்தை மீறும் நிறுவனத் தலைவர் நீதிமன்றத்தின் முன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு இலட்சம் அபராதமும் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் தமக்கு தெரிவிக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்

அதன்படி, அரச அதிகாரிகளின் சிறப்பு விடுமுறையாக ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்ல குறைந்தபட்சம் 4 மணி நேரம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், எழுத்துப்பூர்வ உத்தரவில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இதுபோன்ற சிறப்பு விடுமுறைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதால், வாக்களிக்க ஊழியர்களுக்கு முதலாளிகள் விடுமுறை அளிப்பதில்லை என்று முறைப்பாடு வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிக்கச் செல்வதற்கும் வருவதற்கும் அனுமதிக்கும் தூரம், நேரம் தொடர்பிலான அறிவிப்பினை மனித உரிமைகள் ஆணைக்குழு உருவாக்கியுள்ளது.

விடுமுறை

இதற்கமைய, பணியிடத்திலிருந்து வாக்குச்சாவடிக்கு 40 கிமீ அல்லது அதற்கும் குறைவான தூரத்தில் உள்ளவர்களுக்கு அரை நாள் விடுமுறை,  பணியிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கான தூரம் 40 கிமீ முதல் 100 கிமீ வரை – ஒரு நாள் விடுமுறை,  பணியிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கான தூரம் 100 கிமீ முதல் 150 கிமீ வரை – 1 1/2 நாட்கள் விடுமுறை,  பணியிடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு 150 கிமீ – 2 நாட்களுக்கு மேல் விடுமுறை வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும், பணியாளர்கள் எழுத்துப்பூர்வமாக விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு முதலாளியும் சிறப்பு விடுப்புக்கு விண்ணப்பித்த நபர்கள் மற்றும் விடுப்பு வழங்கப்படும் காலம் ஆகியவற்றைக் காட்டும் ஆவணத்தைத் தயாரித்து பணியிடத்தில் காண்பிக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

யாழில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட சஜித்

Next Post

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு

Next Post
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.