கனடாவில் தீவிர புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர் மரதன் ஓட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ளார்.
ஒன்றாறியோ மாகாணம் வாட்டர்லுவைச் சேர்ந்த நபர் ஒருவர் தீவிர புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
66 வயதான டானா ஃபாக்ஸ் என்பவரே இவ்வாறு மரதன் ஓட்ட போட்டிக்கு தகுதி பெற்றுக் கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் டிசம்பர் மாதம் முதல் சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தீவிர புற்று நோய் காரணமாக அவர் நீண்ட காலம் உயிர் வாழக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை கடக்க முடியாது என மருத்துவர்கள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், மனம் தளராது தொடர்ச்சியாக அவர் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த ஆண்டு ஆரம்பக் கோடைகாலத்தில் புற்றுநோயை இல்லாத ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள ஓட்டத்தில் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளும் அதேவேளை இவர் இவ்வாறு செயல்பாடுகளிலும் பங்கேற்று வருகின்றார்.
Discussion about this post